உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இறந்த கணவரின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடும் 4 மனைவியர்

 இறந்த கணவரின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடும் 4 மனைவியர்

ஹொஸ்கோட்: கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விசித்ரமான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. ஒரு நபரின் சொத்துகளுக்கு, நான்கு மனைவியர் உரிமை கொண்டாடுகின்றனர். உண்மையான மனைவி யார் என்பதை கண்டுபிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர். பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகாவின், பண்டாபுரா கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ராதா. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். ஹொஸ்கோட்டில், கிருஷ்ணனுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் இன்றைய மதிப்பு, 20 கோடி ரூபாயாகும். ஒப்பந்தம் கடந்த 1986ல் கிருஷ்ணன் காலமானார். நிலத்தை மனைவி மற்றும் மகன்களுக்கு உயில் எழுதி வைத்திருந்தார். இந்த நிலத்தை மேம்படுத்தி வீட்டு மனைகளாக்க, குடும்பத்தினர் விரும்பினர். இதற்காக பெங்களூரின் பிரபலமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்நிலையில் வேறொரு பெண், 'நான் தான் ராதா. கிருஷ்ணனின் உண்மையான மனைவி. அவரது 12 ஏக்கர் சொத்தில் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் உரிமை உள்ளது' என சொத்துக்கு உரிமை கொண்டாடி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உண்மை ஆவணங்கள் இவரை தொடர்ந்து, மேலும் இரண்டு பெண்கள், 'நானே ராதா. கிருஷ்ணனின் மனைவி' என, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலாவது ராதா, 'நான் தான் உண்மையான மனைவி; முதல் மனைவி. 1978ல் வாங்கப்பட்ட நிலத்தின் உண்மையான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. என் கணவர் இறந்த பின், என் பெயருக்கு மாறியது. வருவாய்த்துறை ஆவணங்களிலும் என் பெயரே உள்ளது. நான் சில காலம் தமிழகத்தில் இருந்தேன். சமீபத்தில் பெங்களூருக்கு வந்தேன். இப்போது என் நிலத்தின் உரிமைக்காக போராடுகிறேன்' என வாதிடுகிறார். இரண்டாவது ராதா, 'சொத்துக்கு நானே உரிமையாளர். கிருஷ்ணனின் மனைவி. சொத்துக்கு உரிமை கொண்டாடும் பெண், போலியான ஆவணங்கள் வைத்துள்ளார், நிலத்தை மேம்படுத்த, தன் மகன்களுடன் சேர்ந்து, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்' என குற்றம் சாட்டினார். மூன்றாவது ராதா, 'நிலத்துக்கு நானே உண்மையான வாரிசு. 2022ல் செய்யப்பட்ட உயில் என்னிடம் உள்ளது' என்கிறார். நான்காவது ராதா நேரடியாக நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவரது தரப்பில் வெங்கடராம நாயுடு கோலா என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார். கிருஷ்ணனின் உண்மையான மனைவி, பிள்ளைகளுக்கு மட்டுமே, சொத்தில் உரிமை உள்ளது. ஆனால் நான்கு பேர், நானே கிருஷ்ணனின் மனைவி என்கின்றனர். உண்மையான மனைவியை கண்டுபிடிக்கும்படி, போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசாரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை