உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 4,000 மின்சார பஸ்கள் கர்நாடகா ஆர்வம் மின்சார பஸ்கள் அதிகரிக்கும்

4,000 மின்சார பஸ்கள் கர்நாடகா ஆர்வம் மின்சார பஸ்கள் அதிகரிக்கும்

பெங்களூரு : கர்நாடகாவில் மின்சார பஸ்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மாநில அரசு ஆர்வம் காட்டி வருகிறது.அந்த வகையில், புதிதாக 4,000 மின்சார பஸ்கள் வாங்குவதற்கு, நேற்று முன்தினம் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, சட்டம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார்.இதன்படி, பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., - கே.கே.ஆர்.டி.சி., ஆகிய போக்குவரத்துக் கழகங்களின் பெயரில் உலக வங்கியிடம் இருந்து, 3,000 கோடி ரூபாய் குறைந்த வட்டியில் கடன் வாங்கப்பட உள்ளது.நாட்டில் சோதனை முயற்சிக்காக மின்சார பஸ்களை அறிமுகப்படுத்திய போக்குவரத்து நிறுவனங்களில் பி.எம்.டி.சி.,யும் ஒன்றாகும். தற்போது, பி.எம்.டி.சி.,யில் 1,027 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை