உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ் கவிழ்ந்து 49 பேர் காயம்

பஸ் கவிழ்ந்து 49 பேர் காயம்

கார்வார்: மலைப்பாதையில் சென்ற போது, சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 49 பேர் காயம் அடைந்தனர். பல்லாரியில் இருந்து உத்தர கன்னடாவின் குமட்டாவுக்கு நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் டிரைவர், கண்டக்டர், பயணியர் என 49 பேர் இருந்தனர். சாலை பணிகளால் குமட்டா - சிர்சி சாலை மூடப்பட்டு இருந்ததால், அங்கோலாவில் உள்ள வாடி மலைப்பாதை சாலை வழியாக பஸ் திருப்பி விடப்பட்டது. இரவு 9:30 மணிக்கு மலைப்பாதை சாலையின் 7 வது திருப்பத்தில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த 49 பேரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று, பஸ்சில் இருந்தோரை மீட்டு அங்கோலா, குமட்டா மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை