போட்டோ ஷூட் அலப்பறை நுாலிழையில் தப்பிய 5 பேர்
சித்ரதுர்கா : 'பிரீ வெட்டிங் போட்டோ ஷூட்' என்ற அலப்பறைகளால், திருமணம் செய்து கொள்ளவிருந்த ஆணும், பெண்ணும் நுாலிழையில் உயிர் தப்பினர்.திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஆணும், பெண்ணும், 'பிரீ வெட்டிங் போட்டோ ஷூட்' என்ற திருமணத்துக்கு முன் புகைப்படம், வீடியோ எடுக்கும் கலாச்சாரம் அதிகரித்து உள்ளது.மாநிலத்தின் சிறந்த சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்கள் தவிர, சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போட்டோ ஷூட் எடுக்கின்றனர். டுப்பி கிருஷ்ணர் மடத்தில் போட்டோ ஷூட் நடத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.சித்ரதுர்கா மாவட்டம், மடகரிபுரா மேம்பாலத்தில் கீழ் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அவ்வப்போது விரைவு ரயில்கள் வேகமாக செல்லும். இதை பொருட்படுத்தாமல் நேற்று தண்டவாளத்தில் போட்டோ ஷூட் நடந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜின் ஒலி எழுப்பியதை கேட்ட ஆண், பெண் உட்பட ஐந்து பேர் அதிர்ச்சி அடைந்து தண்டவாளத்தில் இருந்து தாவி இறங்கினர்.அவர்கள் இறங்கிய சில வினாடிகளில் அதிவிரைவு ரயில் ஒன்று கடந்து சென்றது. நுாலிழையில் அவர்கள் உயிர் தப்பினர். சற்று தாமதம் செய்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்கும். இதை பார்த்த அப்பகுதியினர், போட்டோகிராபர், வீடியோகிராபர்களை திட்டி, அங்கிருந்து செல்லுமாறு விரட்டினர்.