உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  திருடப்பட்ட 5 வாகனங்கள் மீட்பு

 திருடப்பட்ட 5 வாகனங்கள் மீட்பு

தங்கவயல்: திருட்டுப்போன ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து இருசக்கர வாகனங்களை காமசமுத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர். காமசமுத்திரம் அருகே உள்ள கீரம்மஞ்சு கிராமத்தில் முரளி, 40 என்பவர் சிறிய கடை நடத்தி வருகிறார். இவரின் இருசக்கர வாகனத்தை கடை அருகே நிறுத்தி வைத்திருந்தார். திடீரென காணாமல் போனது. காமசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் நவம்பர் 28 ம் தேதி புகார் செய்தார். புகாரின் பேரில் ஆந்திரா நெல்லுாரை சேர்ந்த சி.டி.ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர் காமசமுத்திரம், பேத்தமங்களா, முல்பாகலின் நங்கிலி, திருப்பதி ஆகிய இடங்களிலும் ஐந்து இரு சக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து, அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி