உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு மோடிக்கு 5 வயது சிறுமி கடிதம்

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு மோடிக்கு 5 வயது சிறுமி கடிதம்

பெங்களூரு: 'போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, தயவு செய்து உதவுங்கள்' என 5 வயது சிறுமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் இணையதளத்தில் பரவி வருகிறது. பெங்களூரை சேர்ந்தவர் அபிரூப் சாட்டர்ஜி. இவர், 'பாகர் புக்' எனும் வணிக சேவை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஆர்யா, 5, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். கடிதத்தில், 'பெங்களூரில் அதீத போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால், பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்கிறேன். சாலைகளும் சரியாக இல்லை. சிரமத்திற்கு ஆளாகிறேன். இதிலிருந்து தப்பிக்க தயவு செய்து உதவுங்கள்' என குறிப்பிட்டு உள்ளார். இந்த கடிதத்தை, சிறுமியின் தந்தை அபிரூப் சாட்டர்ஜி, தன் எக்ஸ் பக்கத்தில் நேற்று பகிர்ந்தார். இதை, அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். குழந்தையின் வெள்ளந்தி தனமான கோரிக்கைக்கு, பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை