உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் 6வது ரயில்

 மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் 6வது ரயில்

பெங்களூரு: மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ஆறாவது ரயில் இயக்கம் இம்மாதம் இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள்வழித்தடத்திற்கு ஓட்டுநர் இல்லாத ஆறாவது ரயில், மேற்கு வங்கத்தில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. சாலை மார்க்கமாக கன்டெய்னர் லாரியில் வந்த ரயில் பெட்டிகள் நேற்று பெங்களூரு ஹெப்பகோடி பணிமனைக்கு வந்தடைந்தன. இங்கு ரயில்களின் பாகங்களை சேர்க்கும் பணிகள் நடக்கும். பிறகு, சோதனை ஓட்டம் செய்யப்படும். இந்த புதிய ரயிலின் வருகை மூலம், மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ஆறாவது ரயிலின் சேவை இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என தெரிகிறது. இதன் மூலம் ரயில்கள் 10 முதல் 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இதனால், பயணியர் காத்திருக்கும் நேரம் கணிசமாக குறையும். இது மெட்ரோ பயணியருக்கு நற்செய்தியாக அமைந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி