மேலும் செய்திகள்
இன்று இனிதாக
22-Aug-2025
தொட்ட கணபதி பெங்களூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்று, தொட்ட கணபதி கோவில். இதை 16ம் நுாற்றாண்டில், கெம்பேகவுடா கட்டினார். விஜயநகர சாம்ராஜ்யத்தில் 1536ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள விநாயகர் சிலை, 18 அடி உயரம்; 16 அடி அகலத்துடன் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் பிரசாதம் வைத்துள்ளார். கடலைக்காய் திருவிழாவின் போது, கடலைக்காய் அபிஷேகம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். விநாயகர் சிலைக்கு வெண்ணெய் அலங்கார உற்சவத்தில், 100 கிலோவுக்கும் அதிகமான வெண்ணெய் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்படும். பெங்களூரின் பசவனகுடியில் இக்கோவில் அமைந்துள்ளது. தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல், மதியம் 12:30 மணிவரை, மாலை 5:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை.
22-Aug-2025