உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கார்வார் சிறையில் சோதனை 7 மொபைல் போன் பறிமுதல்

 கார்வார் சிறையில் சோதனை 7 மொபைல் போன் பறிமுதல்

கார்வார்: கார்வார் சிறையில் கைதிகள், சட்டவிரோதமாக மொபைல் போன்கள் வைத்திருப்பது, உயர் அதிகாரிகளின் சோதனையில் தெரிந்தது. உத்தரகன்னடா மாவட்டம், கார்வார் சிறையில் ஒரே வாரத்தில், இரண்டு முறை கைதிகளுக்கு இடையே, மோதல் சம்பவங்கள் நடந்தன. போதைப்பொருளை அனுமதிக்கவில்லை என கூறி போலீஸ் உயர் அதிகாரிகளை, கைதிகள் தாக்கிய சம்பவமும் நடந்தது. கம்ப்யூட்டர், 'டிவி'யை உடைத்து போட்டனர். கலவரத்துக்கு காரணமான, மங்களூரை சேர்ந்த நான்கு கைதிகள், மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். கார்வார் சிறையில், கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தீவிரமாக கருதிய உயர் போலீஸ் அதிகாரிகள், நேற்று காலை சிறைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கைதிகளின் அறைகளில் ஏழு மொபைல் போன்கள் உட்பட, தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்தன. இவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். கைதிகளிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை