உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 750 கிலோ சந்தன கட்டை பறிமுதல்

750 கிலோ சந்தன கட்டை பறிமுதல்

சித்தாபுரா: பெங்களூரின் சித்தாபுரா வழியாக வாகனத்தில் பெருமளவில் சந்தன கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. எனவே நேற்று அதிகாலையில், சித்தாபுரா போலீசார் தடுப்புகள் வைத்து, வாகனங்களில் சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்திய போது, வெங்காய மூட்டைகள் இருந்தன. சந்தேகமடைந்த போலீசார், மூட்டைகளை பிரித்து பார்த்த போது, சந்தன கட்டைகள் இருப்பது தெரிந்தது. வெங்காயத்துடன் கலந்து வைத்திருந்த சந்தன கட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். 750 கிலோ சந்தன கட்டைகள் இருந்தன. இவற்றை கடத்தி சென்ற ஷேக் ஷாருக், ஷேக் அப்துல், பரமேஷ், ராம் கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரித்ததில், சிராஜ் என்பவர், தன் கூட்டாளிகளுடன் ஆந்திராவின் கர்னுால் வனப்பகுதிகளில் சந்தன மரங்களை வெட்டி, வெங்காய வியாபாரிகள் வேடத்தில், பெங்களூருக்கு கொண்டு வந்தனர். இங்கிருந்து சீனாவுக்கு அனுப்புவதும் தெரிய வந்தது. சந்தன கடத்தலில் தொடர்பு கொண்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை