உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 800 கிலோ அன்னபாக்யா அரிசி பறிமுதல்

800 கிலோ அன்னபாக்யா அரிசி பறிமுதல்

குடகு : கள்ளச்சந்தையில் விற்பதற்காக, வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 800 கிலோ அன்னபாக்யா அரிசி மீட்கப்பட்டது. கர்நாடக அரசு, 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குகிறது. ஆனால் இந்த அரிசி கள்ளச்சந்தையில் விற்பனையாகிறது. சிலர் பயனாளிகளுக்கு பணத்தாசை காட்டி, 'அன்னபாக்யா' அரிசியை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். அதை பாலிஷ் போட்டு உயர் ரக அரிசி என கூறி, அதிக விலைக்கு விற்று சம்பாதிக்கும் சம்பவங்கள், மாநிலத்தில் ஆங்காங்கே நடக்கின்றன. குறிப்பாக குடகு மாவட்டத்தில், அன்னபாக்யா அரிசியை கள்ளச்சந்தையில் விற்பது அதிகரிக்கிறது. நான்கைந்து நாட்களுக்கு முன்பு, குடகின் குஷால் நகரில், அன்னபாக்யா அரிசியை விற்க முற்பட்டபோது, உணவுத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே குடகின், பொன்னம்பேட் தாலுகாவின், கோணிகொப்பா கிராமத்தில், அன்னபாக்யா அரிசி விற்கப்படுவதாக, உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வாகனத்தில் அரிசி மூட்டைகள் கொண்டு செல்வதை கண்டு, தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ரேஷன் அரிசி என்பதை கண்டுபிடித்தனர். 800 கிலோ அரிசியை மீட்டனர். அரிசியை மைசூருக்கு கடத்த முயற்சித்த விட்டலாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை