உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / யாரோ வாங்கிய கடனுக்கு தம்பதியின் வீட்டை ஜப்தி செய்த நிதி நிறுவனம்

யாரோ வாங்கிய கடனுக்கு தம்பதியின் வீட்டை ஜப்தி செய்த நிதி நிறுவனம்

பெங்களூரு,: யாரோ வாங்கிய கடனுக்காக, வீட்டை நிதி நிறுவனத்தினர் ஜப்தி செய்ததால், தம்பதி வீதிக்கு தள்ளப்பட்டனர். பெங்களூரு, எலஹங்காவின், மாருதி நகரில் 15வது கிராசில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரத்னம்மா. தன் தந்தை மூலமாக கிடைத்த 40க்கு 45 அளவுள்ள நிலத்தில், சிறிய வீடு கட்டிக்கொண்டு மனைவியுடன் வெங்கடேஷ் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், இவரது வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், 'இந்த மனையை அடமானம் வைத்து, 40 லட்சம் ரூபாய் லோன் வாங்கியுள்ளீர்கள். கடனை கட்டவில்லை' என, வீட்டு சுவற்றில் 'நோட்டீஸ்' ஒட்டினர். கடனை கட்டாததால், வீட்டை ஜப்தி செய்வதாக கூறி, வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசிவிட்டு, கதவை பூட்டிச் சென்றனர். ஆனால் வெங்கடேஷ், ரத்னம்மா எந்த லோனும் வாங்கவில்லை. அனைத்து ஆவணங்களும், ரத்னம்மா பெயரிலேயே இருந்தும், நிதி நிறுவனத்தினர் ஜெயபிரகாஷ் என்பவருக்கு, இந்த மனையின் பெயரில் 40 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். 'ஜெயபிரகாஷ் யார் என்றே எங்களுக்கு தெரியாது. நாங்கள் வாங்காத கடனுக்கு, வீட்டை ஜப்தி செய்துள்ளனர். இதுகுறித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், விசாரணை நடத்தவில்லை' என, தம்பதி குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ