உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குடிநீரை வீணாக்கினால் ரூ.5,000 அபராதம்

குடிநீரை வீணாக்கினால் ரூ.5,000 அபராதம்

பெங்களூரு: 'குடிநீரை வீணாக்குவோருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோடை காலம் துவங்கி உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மழையும், நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்திய அறிவியல் மையம் எச்சரித்துள்ளது.இதை கருத்தில் கொண்டு, குடிநீரை வீணாக்குவதை தவிர்க்க சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. குடிநீர் வடிகால் வாரியம் சட்டம் - 1964ன் படி, வாகனங்கள் சுத்தம் செய்வது, தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, கட்டுமான பணிகள், செயற்கை நீரூற்று, கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் திரையரங்குகள், மால்கள், சாலைப் பணிகள், சுத்தம் செய்ய குடிநீரை பயன்படுத்தி வீணாக்கக் கூடாது.குடிநீரை வீணாக்கினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை தொடர்ந்தால் கூடுதலாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதை மீறினால் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.குடிநீரை வீணாக்குவதை பார்த்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 18, 2025 19:47

போதிய குடிநீர் மக்களுக்கு நீங்கள் கொடுக்காவிட்டால் உங்களுக்கு மக்கள் அபராதம் விதிக்கலாமா?