உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பண்ணை வீட்டில் விடிய விடிய பார்ட்டி

பண்ணை வீட்டில் விடிய விடிய பார்ட்டி

தேவனஹள்ளி : பண்ணை வீட்டில் நள்ளிரவு தாண்டியும் பார்ட்டி நடத்திய 20 இளம்பெண்கள் உட்பட 31 பேரை போலீசார் செய்தனர். இவர்களிடம் பெருமளவில், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின், கன்னமங்களா கிராமம் அருகில், பண்ணை வீடு உள்ளது. சத்தமாக, 'டிஜே' இசையை அலறவிட்டு நேற்று முன் தினம் இரவு பார்ட்டி நடந்தது.இதை கவனித்த அக்கம், பக்கத்தினர் தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தியபோது, பார்ட்டி நடப்பது தெரிந்தது.இளம்பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பார்ட்டியில் இருந்தனர். இவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வெளி மாநிலங்களை சேர்ந்த சில மென் பொறியாளர்களும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பண்ணை வீட்டில் கோகைன், ஹைபிரிட் கஞ்சா, சரஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பார்ட்டியில் இருந்தவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்திருக்கலாம் என, சந்தேகம் ஏற்பட்டதால் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதால், அவர்களை கைது செய்துள்ளனர்.இதுகுறித்து, டி.சி.பி., சஜித் அளித்த பேட்டி:பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின் கன்னமங்களா கிராமம் அருகில் உள்ள பண்ணை வீட்டில், சட்டவிரோதமாக பார்ட்டி நடப்பதாக தகவல் வந்தது. எனவே நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, பண்ணை வீட்டில் சோதனை நடத்தினோம். பலரும் போதையில் தள்ளாடியபடி இருந்தனர்.ஷெரிப் என்பவரின் பிறந்த நாளையொட்டி இரவு முழுதும் பார்ட்டி நடந்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தி உள்ளனர். இளம் பெண்கள் உட்பட 31 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் அனைவரும் ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.பார்ட்டியில் போதைப் பொருள் விற்கும் ஒருவரும் பங்கேற்றிருந்தார். பார்ட்டி நடத்த அனுமதியளித்த, பண்ணை வீட்டு உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !