சித்தகங்கா மடத்தில் புகுந்த மலை பாம்பால் பரபரப்பு
துமகூரு: சித்தகங்கா மடத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு புகுந்ததால் ஊழியர்கள், மாணவர்கள் பீதி அடைந்தனர்.துமகூரு சித்தகங்கா மடத்தின் வளாகத்தில் சில நாட்களுக்கு முன் இரவு நேரம், சிறுத்தை காணப்பட்டது. அங்கிருந்த நாய்களை விரட்டி சென்றது. இந்த காட்சி மடத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. மடத்தின் ஊழியர்களும், பள்ளி மாணவர்களும் பீதியுடன் நடமாடுகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை, 8 அடி நீளமான மலைப்பாம்பு, வளாகத்தில் இருந்த ஜன்னல் வழியாக, உள்ளே நுழைந்தது. இதை பார்த்து ஊழியர்களும், மாணவர்களும் கிலி அடைந்தனர். உடனடியாக பாம்பு வல்லுநருக்கு தகவல் கொடுத்தனர்.சிறிது நேரத்தில் அங்கு வந்த பாம்பு வல்லுநர், மடத்தில் இருந்து மலைப்பாம்பை பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டு சென்றார். அதன்பின் மடத்தில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.உடனடியாக பாம்பு வல்லுநர் அங்கு வந்து பாம்பை பிடித்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள், ஊழியர்கள் தப்பினர். இச்சம்பவத்தால் மடத்தில் சில மணி நேரம், பதற்றமான சூழ்நிலை நிலவியது.