உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்கிரசாருக்கு குறி!

காங்கிரசாருக்கு குறி!

அமித் ஷா மகன் ஜெய்ஷாவும் தொழில் நிறுவனங்கள் நடத்துகிறார். அவை வெளிப்படையாக செயல்படுகின்றனவா? மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் 16 சர்க்கரை ஆலைகள் உள்ளன. அங்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்துவது இல்லை. காங்கிரஸ் தலைவர்களை மட்டும் குறிவைக்கின்றனர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி, மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியவர். பெங்களூரில் தனக்கென சாம்ராஜ்யத்தை உருவாக்கி, மூன்று முறை எம்.எல்.ஏ.,வானவர். அவருடைய வீடுகளில், அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.அதானி, அம்பானி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது இல்லை. பா.ஜ.,வின் விஜயேந்திரா வீட்டில் சோதனை நடப்பது இல்லை. மத்திய, மாநில பா.ஜ.,வினரின் மிரட்டலுக்கு, நாங்கள் பயப்படமாட்டோம்.அடுத்த 2029ல் மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அப்போது பா.ஜ., தலைவர்களை தேடித்தேடி, திஹார் சிறையில் தள்ளுவது உறுதி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை குறிவைப்பது, நல்லது அல்ல.பிரதீப் ஈஸ்வர்,காங்., - எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ