உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பயங்கரவாதிகளுக்கு பாடம் மடாதிபதி வலியுறுத்தல்

பயங்கரவாதிகளுக்கு பாடம் மடாதிபதி வலியுறுத்தல்

மைசூரு: ''பஹல்காமில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்,'' என உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள், மத்திய அரசை வலியுறுத்தினார்.மைசூரு மாவட்டம், ஹூன்சூரில் இருந்து உடுப்பிக்கு நேற்று புறப்படுவதற்கு முன் அவர் அளித்த பேட்டி:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது கொடூரமான செயல். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஹிந்து சமூகமும் இச்சம்பவத்தை கண்டிக்க வேண்டும்.இச்சம்பவம் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்து உள்ளது. ஒருபுறம் காஷ்மீரிலும், மறுபுறம் மேற்கு பகுதியிலும் பயங்கரவாதிகளின் வன்முறை எல்லையை தாண்டி விட்டது. இதை தடுக்க, மத்திய அரசு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும்.நாட்டு மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் பணியை அரசு செய்யட்டும். உள்துறை அமைச்சகம் இதை எச்சரிக்கை மணியாக கருத வேண்டும். இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டிய நேரம், மோடி அரசுக்கு வந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை