உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பீஹார் தேர்தலுக்காக வசூல் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு

பீஹார் தேர்தலுக்காக வசூல் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு

பெங்களூரு: ''பீஹார் தேர்தலுக்கு செலவு செய்ய, கர்நாடக அதிகாரிகளிடம், அமைச்சர்கள் பணம் வசூலிக்கின்றனர்'' என்று, ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா குற்றம் சாட்டினார். ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி: பீஹார் தேர்தலுக்கு செலவு செய்வதாக கூறி கர்நாடக அமைச்சர்கள், தங்கள் துறைகளின் அதிகாரிகளிடம் பணம் பறிக்கின்றனர். இதுபற்றி பல அதிகாரிகள், எங்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதிகாரிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம், பீஹார் செல்லவில்லை. அது எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. ஆலந்த் தொகுதியில் ஓட்டு மோசடி நடந்திருப்பதாக, காங்கிரஸ் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. எஸ்.ஐ.டி., அமைத்து இருப்பது கண்துடைப்பு நாடகம். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பற்றி, காங்கிரஸ் தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக வாய்க்கு வந்ததை பேசுகின்றனர். இது காங்கிரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். பிரியங்க் கார்கே தனது அமைச்சர் பதவியை தக்க வைக்கவும், ஹரிபிரசாத் அமைச்சர் பதவியை பெறவும் ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசுகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற்றவர்கள் பற்றி, என்ன பேச முடியும். ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற, பி.டி.ஓ.,வை, 'சஸ்பெண்ட்' செய்தது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை