உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடிகை பலாத்காரம் நடிகருக்கு ஜாமின்

நடிகை பலாத்காரம் நடிகருக்கு ஜாமின்

பெங்களூரு: உடன் நடித்த நடிகையை பலாத்காரம் செய்த புகாரில் கைதான நடிகர் மதேனுார் மனு, நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.தன்னுடன் டிவி நிகழ்ச்சியில் நடித்த நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில், மே 22ம் தேதி ஹாவேரியில் இருந்த நடிகர் மதேனுார் மனுவை போலீசார் கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், மூத்த நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன், துர்வா சர்ஜா ஆகியோர் குறித்து ஆட்சேபனைக்கு உரிய வகையில் மதேனுார் மனு பேசும் ஆடியோ மே 27ல் வெளியானது.இதனால் கோபமடைந்த சிவராஜ் குமார் ரசிகர்கள், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.இதை ஏற்றுக் கொண்ட வர்த்தக சபை, சின்னத்திரை, வெள்ளித்திரைகளில் நடிக்க மதேனுார் மனுவுக்கு வாழ்நாள் தடை விதித்தது.இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று மதேனுார் மனு வெளியே வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன், துருவா சர்ஜா குறித்து நான் பேசியதாக வெளியான ஆடியோவில் உண்மையில்லை. அது என்னுடைய குரலும் அல்ல. முதலில் சிவராஜ் குமாரை சந்தித்து, உண்மை என்ன என்பதை விளக்கி, மன்னிப்புக் கேட்பேன்.எனக்கு எதிராக, 50,000 ரூபாய் செலவழித்து, இந்த ஆடியோவை வெளியிட்டு உள்ளனர். என் கதையை முடிக்கவும் தயாராக உள்ளனர். என்னுடைய மூன்று ஆண்டு கடின உழைப்பை, ஒரே நாளில் முடித்துவிட்டனர்.நான் ஏழை; அவர்களுக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி போராடி வெளியே வருவேன்.ஐந்தாறு பேர் சேர்ந்து திட்டமிட்டு பழிவாங்கிவிட்டனர். என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் தடையாக இருந்தனர். ஆனாலும், நான் கதாநாயகனாக நடித்த திரைப்படம், பல தடைகளை தாண்டி வெளியானது.திரைப்படம் வெளியீடு விளம்பரத்துக்காக குனிகல் சென்றபோது, என் மீது முட்டை வீசினர். என்னை தாக்கி, சட்டையை கிழித்தனர். கடைசியில் என்னுடன் இருந்தவர்களே, என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை