உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாதவிடாய் பிரச்னைக்கு தீர்வு துாதரானார் நடிகை ரம்யா

 மாதவிடாய் பிரச்னைக்கு தீர்வு துாதரானார் நடிகை ரம்யா

பெங்களூரு: பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உடல்நல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, 'ரிதுதாரே' திட்டத்தின் துாதராக, முன்னாள் எம்.பி.,யும், நடிகையுமான ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு விதான் சவுதாவில் சுகாதார துறை அமைச்சர் காதர் தலைமையில், மாதவிடாய் தொடர்பான பெண்கள் சுகாதார கொள்கை வகுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின், அமைச்சர் காதர் கூறியதாவது: பெண்களின் சுகாதாரத்துக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஆறு சிறப்பு திட்டங்களை கர்நாடகா அரசு விரைவில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக கர்நாடகாவில் 'ரிதுதாரே' என்ற கொள்கையை செயல்படுத்த, சுகாதார துறை முடிவு செய்துள்ளது. இந்த கொள்கையின் கீழ், பெண்களின் வாழ்க்கை முறை, உணவு முறை, உறக்கம் உட்பட பல்வேறு சுகாதார அம்சங்கள் குறித்து நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் வழிகாட்டுவர். இதற்கான கொள்கையை வகிக்க, டாக்டர் ஜோத்ஸ்னா தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான துாதராக, நடிகை ரம்யா நியமிக்கப்பட்டு உள்ளார். பெண்களின் மாதவிடாய் பிரச்னை, அதன் அறிகுறிகள், அது தொடர்பான உடல்நல பிரச்னைகள் குறித்து தகவல்களை, ஆஷா சுகாதார பணியாளர்கள், மாநிலம் முழுதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவர். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், விரிவான அறிக்கை தயாரித்து, அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ