உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனைவியை வெட்டிய போதை கணவர் கைது

மனைவியை வெட்டிய போதை கணவர் கைது

துமகூரு: குடிபோதையில், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார். துமகூரு மாவட்டம், சிக்கநாயகனஹள்ளி தாலுகா, ஹுளியாரு அருகில் உள்ள லக்கேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நாகராஜ், 35. இவரது மனைவி பவித்ரா, 33. துமகூரின், எஸ்.எஸ்.புரம் அருகில், நாகராஜ் இளநீர் வியாபாரம் செய்கிறார். இவருக்கு குடிப் பழக்கம் இருந்ததால், தம்பதிக்கிடையே அவ்வப்போது தகராறு நடப்பது வழக்கம். நேற்று காலை நாகராஜ் குடிபோதையில் வந்ததால், தம்பதிக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த நாகராஜ், அரிவாளால் கழுத்து, கை உள்ளிட்ட பாகங்களில் வெட்டனார். காயமடைந்த பவித்ராவை மீட்டு, அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்து, போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த துமகூரு நகர் போலீசார், நாகராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ