உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கல்

 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கல்

பெங்களூரு: தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மோகன் ராஜ், செல்வமணிக்கு கூடுதல் பொறுப்புகளை ஒதுக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: l வனம், சுற்றுச் சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் அஞ்சும் பர்வேஸ், பொது பணி துறை கூடுதல் தலைமை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார். l வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் ராஜேந்திர குமார் கட்டாரியா, உள்துறை கூடுதல் தலைமை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார். l வீட்டு வசதி துறை செயலர் மோகன் ராஜ், சமூக நலத்துறை செயலராக நியமனம். வீட்டு வசதி துறை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார். l போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் செல்வமணி, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநர் பதவியை கூடுதலாக கவனிப்பார். l காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ், கர்நாடக நகர குடிநீர் வழங்கல் துறை நிர்வாக இயக்குநராக நியமனம். l தொழில் வளர்ச்சி கமிஷனர் குஷ்பு சவுத்ரிக்கு, இன்வெஸ்ட் கர்நாடகா போரம், அரசின் மின்சார தொழிற்சாலை, மைசூரு லேம்ப் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை