தமிழ் ஐ.ஏ.எஸ்.,சுக்கு கூடுதல் பொறுப்பு
பெங்களூரு: தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிவண்ணனுக்கு, அரசு கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளது. பி.டி.ஏ., கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனராக இருந்தவர் ஜெயராம். இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் காலியாகும் அப்பதவியை, சமூக நலத்துறை முதன்மை செயலராக உள்ள, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிவண்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக அரசு வழங்கி உள்ளது.