மேலும் செய்திகள்
சாலைகளில் உருவாகும் பள்ளங்களால் ஆபத்து
16-May-2025
பெங்களூரு : சாலையில் உள்ள பள்ளங்களை, 'ஈகோ பிக்ஸ்' எனும் இயந்திரம் மூலம் விரைந்து அடைக்க மாநகராட்சி நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பெங்களூரு மாநகராட்சியின் தலைமையகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது, துஷார் கிரிநாத் பேசியதாவது:நகரின் சாலைகளில் உள்ள பள்ளங்களை, ஈகோ பிக்ஸ், குளிர் கலவை மூலம் உடனடியாக அடைக்க வேண்டும். மாநகராட்சி கட்டுப்பாடில் உள்ள எட்டு மண்டலங்களிலும், சாலைகளில் உள்ள பள்ளங்களை அடைக்கும் பணிகளில், உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட வேண்டும். சாலை சீரமைக்கும் பணிகளுக்காக ரூ.690 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.மழைக்காலங்களில் நகரில் 82 இடங்களில் தண்ணீர் தேங்கும். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்க வடிகால்களில் தண்ணீர் சரியாக செல்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நகரில் உள்ள 44 வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பிரச்னைகளை தீர்க்க தற்காலிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதே சமயம் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
16-May-2025