மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'
04-Nov-2025
ஸ்ரீராமபுரம்: கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி யாமினி பிரியாவின் தோழிகளை, விக்னேஷ் மிரட்டியது, 'வாட்ஸாப்' உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது. பெங்களூரு, ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையாவில் வசிப்பவர் கோபால். இவரது மகள் யாமினி பிரியா, 20. ஒருதலை காதல் விவகாரத்தில் கடந்த மாதம் 16ம் தேதி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் யாமினியின் எதிர் வீட்டில் வசித்த விக்னேஷ், 25, என்பவர் கைது செய்யப்பட்டார். 'மிஷன் யாமினி பிரியா' என்ற பெயரில் 'வாட்ஸாப்' குழு உருவாக்கி, அந்த குழுவின் உறுப்பினர்கள் மூலம் யாமினியை, விக்னேஷ் கண்காணித்தது தெரிந்தது. விக்னேஷின் செல்போனை பறிமுதல் செய்து, போலீசார் ஆய்வு செய்தபோது, 'வாட்ஸாப்' மெசேஜ்கள் அழிக்கப்பட்டது தெரிய வந்தது. அதை மீட்டெடுக்க தடயவியல் ஆய்வகத்திற்கு செல்போன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போலீசாருக்கு, தடயவியல் ஆய்வகம் கொடுத்த அறிக்கையில், மிஷன் யாமினி பிரியா பெயரிலான 'வாட்ஸாப்' குழுவில் யார், யார் இருந்தனர், என்னென்ன தகவல்கள், புகைப்படங்கள் பதிவிடப்பட்டன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது என்றும், யாமினியின் கல்லுாரி தோழிகள் நான்கு பேர் இருந்ததும் தெரிந்தது. அவர்கள் தான் யாமினி தினமும் கல்லுாரிக்கு வரும் நேரம், வீட்டிற்கு செல்லும் நேரம், யார், யாருடன் பேசுகிறார் என்ற தகவல்களை பகிர்ந்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'யாமினியின் தோழிகள் நான்கு பேரிடமும் விசாரித்தோம். அவர்களிடம் விக்னேஷ் தன்னை சி.சி.பி., போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். யாமினியை தன் தங்கை என்று கூறியதுடன், 'அவர் பின்னால் யாராவது சுற்றுகிறார்களா என்று எனக்கு தகவல் கூற வேண்டும். இல்லாவிட்டால் பொய் வழக்கில் உங்களை சிறைக்கு தள்ளுவேன்' என, நான்கு பேரையும், விக்னேஷ் மிரட்டி உள்ளார். இந்த மிரட்டலுக்கு பயந்து, நான்கு பேரும் யாமினி பற்றிய தகவலை 'வாட்ஸாப்' குழுவில் பகிர்ந்து உள்ளனர்' என்றனர்.
04-Nov-2025