உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆந்திர துணை முதல்வர் இன்று சிக்கபல்லாபூர் வருகை

ஆந்திர துணை முதல்வர் இன்று சிக்கபல்லாபூர் வருகை

சிக்கபல்லாபூர் : தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், இன்று சிக்கபல்லாபூர் வருகை தருகிறார். இது குறித்து மாவட்ட எஸ்.பி., குஷால் சவுக்சே கூறியதாவது: சிந்தாமணியில் நடக்கும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபாலகவுடாவின் பிறந்த நாள் விழாவுக்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நாளை (இன்று) சிக்கபல்லாபூர் வருகை தருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் வரும் வாய்ப்பு உள்ளது. ஆர்.சி.பி., அணி பாராட்டு விழா, தமிழகம் கரூரில் ஏற்பட்டது போன்று கூட்டநெரிசல் சம்பவம் நிகழாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. விழா தொடர்பாக, ஏற்பாட்டாளர்களுடன் ஏற்கனவே மூன்று முறை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடக்க கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. விழாவின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆறு டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 50 சப் இன்ஸ்பெக்டர்கள், 500 ஏட்டுகள், நான்கு கே.எஸ்.ஆர்.பி., படையினர், மூன்று தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை