கொல்லுார் மூகாம்பிகை அண்ணாமலை தரிசனம்
உடுப்பி: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நேற்று கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்தார். விஜயதசமி நாளான நேற்று அதிகாலையே, அண்ணாமலை, உடுப்பியின், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு வந்தார். மூகாம்பிகையை தரிசித்து, சிறப்பு பூஜைகள் செய்தார். இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், மரியாதை அளிக்கப்பட்டது. அண்ணாமலை, உடுப்பியில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். எனவே, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், அண்ணாமலையை காண முட்டி மோதினர். நான், நீ என, போட்டி போட்டு கொண்டு, அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். அண்ணாமலையின், 'எக்ஸ்' பதிவில், 'அனைத்து மக்களின் நன்மைக்காக, கொல்லுார் மூகாம்பிகை அன்னையை பிரார்த்தனை செய்தேன். சிறப்பு பூஜைகள் செய்தேன்' என தெரிவித்துள்ளார்.