39 வாரியங்களுக்கு தலைவர்கள் நியமனம்
பெங்களூரு: கர்நாடகா அரசின் 39 வாரியங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 28 மாத காத்திருப்புக்கு முடிவு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் 2023ல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. பல்வேறு துறைகளின் கீழ் வரும் வாரியங்களின் தலைவர் பதவியை பிடிக்க, காங்கிரசில் கடும் போட்டி எழுந்தது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் ஆதரவாளர்கள், கட்சிக்காக உழைத்த மூத்த தொண்டர்கள் பதவிக்காக முட்டி மோதினர். இதனால் வாரியங்களின் தலைவர்களை நியமிப்பதில் இழுபறி ஏற்பட்டது. ஒரு வழியாக 28 மாதங்களுக்கு பின், ௩௯ வாரியங்களுக்கு தலைவர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.