உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிக்கன் துண்டுக்காக நண்பர்களுக்குள் தகராறு: ஒருவர் கொலை

சிக்கன் துண்டுக்காக நண்பர்களுக்குள் தகராறு: ஒருவர் கொலை

பெலகாவி: சிக்கன் துண்டுக்காக, நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.பெலகாவி மாவட்டம், யரகட்டி தாலுகாவின், சூபட்லா கிராமத்தில் வசித்தவர் விநோத் மலஷெட்டி, 30. இவர் கூலி வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவரது நண்பர் அபிஷேக் என்பவருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனவே அவர் நேற்று முன் தினம் இரவு, நண்பர்களுக்கு மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.விருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குடிபோதையில் சிக்கன் துண்டுக்காக, விட்டல் ஹாரோகொப்பா என்பவருடன், விநோத் மலஷெட்டி தகராறு செய்தார். இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கோபமடைந்த விட்டல் ஹாரோகொப்பா, காய்கறிகள் வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு வந்து, விநோத்தை மார்பில் குத்தினார்.படுகாயமடைந்த விநோத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த முரகோடா போலீசார், விட்டல் ஹாரோகொப்பாவை கைது செய்தனர். விநோத்தின் உடலை மீட்டனர். வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர். சம்பவ இடத்தை கூடுதல் எஸ்.பி., உட்பட, பல உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.வெறும் சிக்கன் துண்டுக்காக, கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா, பார்ட்டியில் நண்பர்கள் இருந்தும், விநோத்தை விட்டல் கத்தியால் குத்திக் கொலை செய்தபோது, தடுக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எனவே போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை