மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
3 minutes ago
பழங்குடியினருக்கு ஆணையம் கர்நாடக அரசுக்கு பரிந்துரை
5 minutes ago
பங்கார்பேட்டை அருகே கார் கவிழ்ந்து 4 பேர் பலி
8 minutes ago
மத்திய அரசிடம் இருந்து தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிவாரண நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் 2,500 ரூபாய் மானியமாக அரசு வழங்கும் என்றும், இதற்காக முதற்கட்டமாக 1,250 கோடி ரூபாயை அரசு விடுவிக்கும் எனவும், சட்டசபையில் துணை முதல்வர் பரமேஸ்வர் அறிவித்தார் அரசியலில் ஈடுபட்ட, மற்ற மாவட்டங்களில் இருந்து பெங்களூரு வந்தவர்கள் திரும்பி சென்றது இல்லை; இங்குள்ள சிலருக்கு இரண்டு முறை திருமணம் ஆகியுள்ளது என்று சட்டசபையில் முதல்வர் சிவகுமார் கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது. யார், யாருக்கு இரண்டு முறை திருமணம் நடந்தது என சொல்லுங்கள் என, பா.ஜ., உறுப்பினர் ஹரிஷ் கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட விஷயங்கள் பற்றி இங்கு பேச வேண்டாம் என்று முதல்வர் கூறினார் கர்நாடக சட்டசபையின் சிறப்பு அமர்வு நேற்று முன்தினமே நிறைவு பெற இருந்தது. அரசு கேட்டு கொண்டதால் நேற்று நீட்டிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை சபை துவங்கியதில் இருந்து மதியம் வரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசையில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன ம.ஜ.த., உறுப்பினர் சாரதா பூர்நாயக் பேச எழுந்த போது, பா.ஜ., உறுப்பினர் சுனில்குமாரும் எழுந்தார். 'அக்கா 10 நிமிடம் பேசி விடுகிறேன்' என சுனில்குமார் கூற, எனக்கு பேசவே இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது. நீங்களே பேசினால் எப்படி என சிரித்தபடியே கேட்டார். அவரை சமாதானப்படுத்தி சுனில்குமார் அமர வைத்தார் நமது மாநில எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாடுகளில் இல்லை; இங்கு தான் உள்ளனர். வறட்சி நிலவரம் பற்றி அவர்களுக்கும் தெரியும். நாம் அனைவரும் சேர்ந்து வறட்சி பணி மேற்கொள்ள வேண்டும் என்று, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த துணை சபாநாயகர் மங்கள் வைத்யா அதிரடியாக கூறினார் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேசினர். கோபம் அடைந்த துணை சபாநாயகர் மங்கள் வைத்யா, தனது இருக்கையில் இருந்த பெல்லை அழுத்தி, உட்காருங்கள் என்று கடுகடுப்புடன் கூறினார்.
3 minutes ago
5 minutes ago
8 minutes ago