உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொலை கைதி மீது தாக்குதல்

கொலை கைதி மீது தாக்குதல்

தட்சிண கன்னடா: மங்களூரு பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கில் முக்கிய கைதியை, சிறையிலேயே சில கைதிகள் தாக்கினர்.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில், பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி, படுகொலை செய்யப்பட்டார். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைமறைவாக இருந்த சோட்டா நவுசத், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் போலீஸ் கஸ்டடி முடிந்ததால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.சுகாஸ் கொலையில் சோட்டா நவுசத் மீது தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வு துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். எனவே, அவரை, மைசூரு சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.மங்களூரு சிறைக்கு நவுசத் அழைத்து வரப்பட்ட போது, அங்கிருந்த மற்ற கைதிகள், தங்கள் கையில் கிடைத்த கல் உட்பட மற்ற பொருட்களால் அவரை தாக்கினர். சிறை ஊழியர்கள், அவரை மீட்டனர். அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை