மேலும் செய்திகள்
கிராமங்களில் சைபர் வழக்குகள் அதிகரிப்பு
01-May-2025
பெங்களூரு: காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தீயணைப்பு துறை மற்றும் அவசர துறை திட்டமிட்டு உள்ளது.கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக வீட்டில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் அதிகமாகி உள்ளன. இதனால், உயிரிழப்புகள், தீக்காயங்கள், பலத்த சேதங்கள் ஏற்படுகின்றன. நேற்று முன்தினம் கூட பெங்களூரு, நெலமங்களா பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், நகாராஜ், சீனிவாஸ் என இருவர் உயிரிழந்தனர். இதேபோல, கடந்த மாதம் பையப்பனஹள்ளி, அப்பாயா ரெட்டி லே - அவுட்டில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.இதனை தீவிரமாக எடுத்து கொண்ட தீயைணப்பு மற்றும் அவசர சேவை துறை சார்பில் தெரிவிக்கபட்டதாவது:காஸ் சிலிண்டர்களில் ஏற்படும் கசிவுகள் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இது நகரங்களை விட கிராமப்புறங்களிலே அதிகம் நடக்கிறது. இதற்கு காரணம் கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு இல்லாததே. மேலும், சில வீடுகளில் ரெகுலேட்டர்கள், காஸ் பைப்புகள் போன்றவை காலாவதியான பிறகும் கூட பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.எனவே, கிராமங்களில் வசிப்போரிடம் சிலிண்டரில் ஏற்படும் கசிவு, தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வரும் காலங்களில் தீவிரமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் நடத்தப்படும். ஏற்கனவே, கடந்த ஆண்டில் மாநிலம் முழுதும் 15,000க்கும் மேற்பட்ட விழிப்பணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு உள்ளது. மேலும், மக்கள் தங்கள் வீட்டில் உள்ள சிலிண்டர் இணைப்புகளை தினமும் பரிசோதிக்க வேண்டும். இரவு துாங்கும் போது காஸை ஆப் செய்து விட்டு துாங்கவும். சமையலறை நன்கு காற்றோட்டமாக இருக்கவும். காஸ் கசிவை உணர்ந்தால், தீப்பெட்டி, லைட்டர், மின்சாதனங்கள் இயக்குவதை தவிர்க்கவும்.வெப்பம் அல்லது சூரிய ஒளி படாத இடத்தில் காஸ் சிலிண்டரை வைக்கவும். வீட்டில் உள்ள அனைவரும் அடிப்படை நடவடிக்கைகளை கற்று கொள்ள வேண்டும். தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
01-May-2025