உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குடல் வெளியே வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது

 குடல் வெளியே வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது

ஹூப்பள்ளி: பிறந்த குழந்தைக்கு குடல் வெளியே வந்ததால், ஆம்புலன்ஸ் மூலம் ஹூப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கொப்பால் மாவட்டம் குக்கனுாரை சேர்ந்தவர்கள் விஜயலட்சுமி - மல்லப்பா தம்பதி. கர்ப்பிணியான விஜயலட்சுமிக்கு, தாலுகா மருத்துவமனையில், கடந்த 27 ம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில், குழந்தையின் குடல், சிறுநீரகங்கள் வெளியே வந்தன. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், கொப்பால் மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தையையும், தாயையும் அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். கொப்பாலில் இருந்து ஹூப்பள்ளிக்கு 110 கி.மீ., துாரம் உள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாரிடம் பேசினர். போலீசாரும், 'ஜீரோ டிராபிக்' ஏற்படுத்தி கொடுத்தனர். குழந்தையும், தாயும் ஆம்புலன்சில் ஹூப்பள்ளிக்கு ஒரு மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை