உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி பலாத்கார மிரட்டல் விடுத்த பெண் கைது

 தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி பலாத்கார மிரட்டல் விடுத்த பெண் கைது

உடுப்பி: ரியல் எஸ்டேட் தொழில் பெயரில், தொழிலதிபரிடம் 70 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த பெண், நேற்று கைது செய்யப்பட்டார். உடுப்பி மாவட்டம், காபு தாலுகாவின் படுபிதரேவின் நட்சாலு கிராமத்தில் வசிக்கும் பெண் ஜீனத் இப்ராகிம், 35. இவருக்கு உடுப்பியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அறிமுகமானார். தானும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறினார். தொழிலதிபருடன் பங்குதாரராக சேர்ந்து, அலுவலகம் திறந்தார். நிலம் வாங்குவதாக நம்ப வைத்து, தொழிலதிபரிடம் 70 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த பணத்தில் நிலம் வாங்காமல், தன் சொந்த தேவைக்கு பயன்படுத்தினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிலில் இருந்து தொழிலதிபர் விலகினார். அலுவலகத்தை காலி செய்யும் போது, சில ரகசிய கோப்புகளும், பென் டிரைவும் கண்டுபிடிக்கப்பட்டன. இதை பார்த்த போது, மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நபர்களின் தனிப்பட்ட மற்றும் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் இருந்ததை பார்த்து, தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்தார். ஜீனத் இப்ராகிமுடன் தொடர்பை முறித்துக்கொள்ள விரும்பிய தொழிலதிபர், தான் கொடுத்த 70 லட்சம் ரூபாயை திருப்பி தரும்படி கேட்டார். அப்போது ஜீனத்தின் சுயரூபம் தெரிந்தது. தொழிலிபரின் புதிய அலுவலகத்தில் நுழைந்து, மேலும் பணம் கேட்டார். பணம் கொடுக்காவிட்டால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பொய் புகார் அளிப்பதாக மிரட்டினார். தொழிலதிபரின் ஆபா ச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக, பிளாக்மெயில் செய்தார். தொழிலதிபரின் மனைவி, பிள்ளைகளை கடத்தி கொலை செய்வதாக மிரட்டினார். எனவே உடுப்பி நகர் போலீஸ் நிலையத்தில், தொழிலதிபர் புகார் அளித்தார். இது குறித்து, நடவடிக்கை எடுத்த போலீசார், ஜீனத் இப்ராகிமை நேற்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை