உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஸ்ரீ பூர்ண, ஸ்ரீ புஷ்பகலா சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா கல்யாண மஹோத்சவம்

 ஸ்ரீ பூர்ண, ஸ்ரீ புஷ்பகலா சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா கல்யாண மஹோத்சவம்

பெங்களூரு: ஸ்ரீ பகவதி கீர்த்தனை சாஸ்தா பக்த சங்கம் அறக்கட்டளை சார்பில் ஒன்பதாம் ஆண்டு ஸ்ரீ பூர்ண, ஸ்ரீ புஷ்பகலா சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா கல்யாண மஹோத்சவம் வரும் 18, 19 ல் நடக்கிறது. பெங்களூரு விநாயகா தியேட்டர் ஹரிநகர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம மண்டபத்தில் விழா நடக்கிறது. முதல் நாளான 18ம் தேதி மதியம் முதல் மாலை வரை தோடய மங்கலம், நுரனி சூடாமணி பாகவதர் குழுவினரின் சாஸ்தா அஸ்டபதி; மாலையில் ஜானவாசம்; கணேசாடி தியானம், இரவில் தோலோத்சவம், மஹா தீபாராதனைக்கு பின், அன்னதானம் வழங்கப்படுகிறது. இரண்டாம் நாளான 19ல் காலையில் உஞ்சவிருத்தி, சாஸ்தா பூஜை, சாஸ்தா திவ்யநாமம், நுரனி சூடாமணி பாகவதர் குழுவினரின் சாஸ்தா திருக்கல்யாணம்; மதியம் ஆஞ்சநேய உத்சவம், மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஓம் எஸ்.பி.கே.எஸ்.பி.எஸ்.டி., டிரஸ்டிகள் செய்துள்ளனர். பக்தர்கள், 80955 96359, 97403 72277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை