உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கம்பாலா விளையாட்டுக்கு எதிர்ப்பு: அரசுக்கு எதிர்ப்பாளர்கள் அவகாசம்

 கம்பாலா விளையாட்டுக்கு எதிர்ப்பு: அரசுக்கு எதிர்ப்பாளர்கள் அவகாசம்

மைசூரு: 'மைசூரு தசராவின் போது, கம்பாலா நடத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்' என, சுற்றுச்சூழலுக்கான அமைப்பு வீதியில் இறங்கி போராட தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது. இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தசராவின் போது, கம்பாலாவை நடத்தும் திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும். இத்திட்டத்தை திரும்ப பெற, ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும். இந்த அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால், படிப்படியாக போராட்டம் நடத்தப்படும். கம்பாலா விளையாட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை வலுக்கட்டாயமாக திணிப்பதை எதிர்க்கிறோம். மைசூரு மண் சமவெளியாக இல்லை. தசராவின் போது உள்ளூர் விளையாட்டுகளும், கலாசார கலைகளும் ஊக்கவிக்கப்பட வேண்டும். அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தன் முடிவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !