உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விஜயேந்திராவுக்கு ஹரிபிரசாத் சவால்

 விஜயேந்திராவுக்கு ஹரிபிரசாத் சவால்

பெங்களூரு: ''பா.ஜ., தலைவர்கள் மீதுள்ள வழக்குகள் பற்றி பேசுங்கள்,'' என, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் சவால் விடுத்துள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: சோனியா, ராகுல் சம்பந்தப்பட்ட 'நேஷனல் ஹெரால்டு' பற்றி பேசும், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, அவரது தந்தை எடியூரப்பா லஞ்சம் பெற்று சிறைக்கு சென்று வந்தது பற்றியும், அவர் மீது உள்ள 'போக்சோ' வழக்கு பற்றியும் தைரியம் இருந்தால் பேசட்டும். எங்களை பற்றி பேச அவருக்கு தார்மிக உரிமை இல்லை. நேஷனல் ஹெரால்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து 10 ரூபாய் கூட எடுக்க முடியாது. அயோத்தி ராமர் கோவிலில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பா.ஜ., தலைவர்கள் வாய் திறக்கவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., பெலகாவியில் கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டம் முடிந்ததும் என்ன பிரச்னை எழுமோ தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !