உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாறுபட்ட சுவையுடன் பீட்ரூட் முறுக்கு!

மாறுபட்ட சுவையுடன் பீட்ரூட் முறுக்கு!

– நமது நிருபர் – பொதுவாக கடலை மாவு, அரிசி மாவில் முறுக்கு செய்வது வழக்கம். அவற்றுடன் பீட்ரூட் சேர்த்து, முறுக்கு செய்து பாருங்கள். இனிப்பும், காரமும் கலந்து வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மாலை நேரம், டீயுடன் சாப்பிட ஏற்றது. தேவையான பொருட்கள் l பீட்ருட் – 1 l அரிசி மாவு – 2 கப் l கடலை மாவு – அரை கப் l எள் – 2 ஸ்பூன் l சீரகம் – 1 ஸ்பூன் l உப்பு – தேவையான அளவு l மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன் l தண்ணீர் – தேவையான அளவு l வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் l எண்ணெய் – முறுக்கு சுட தேவையான அளவு செய்முறை முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். நீரில் போட்டு நன்றாக வேக வைக்கவும். ஆறிய பின் மிக்சியில் போட்டு அரைக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, எள் சீரகம், மிளகாய் பொடி, உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் நன்றாக பிசையவும். அதன்பின் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும், முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, மாவை நிரப்பி, பட்டர் பேப்பர் மீது முறுக்கு பிழியவும். அதை எடுத்து எண்ணெயில் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின், எடுத்து டிஷ்யூ பேப்பர் மீது வைக்கவும். எண்ணெய் உறுஞ்சியதும், டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது வீட்டினருக்கு காபி அல்லது டீயுடன் சாப்பிட கொடுங்கள். வித்தியாசமான சுவையுடன் இருக்கும். நீண்ட நாட்கள் வரை கெடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை