உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டி இன்று துவக்கம்

 பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டி இன்று துவக்கம்

பெங்களூரு: 'பெங்களூரு ஓபன் டென்னிஸ்' போட்டி இன்று துவங்குகிறது. உலகின் 19 நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்கும் 'பெங்களூரு ஓபன் டென்னிஸ்' போட்டி இன்று துவங்குகிறது. இது, பெங்களூரில் எஸ்.எம்.கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டி உலக அரங்கில் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்களான சுமித் நாகல், எஸ்.டி.பிரஜ்வல், கரண் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது குறித்து கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்க கவுரவ செயலர் மஹேஸ்வர ராவ் கூறுகையில், “மாநில அரசின் ஆதரவுடன் பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. இந்த போட்டி மூலம் நம் நாட்டு வீரர்களின் திறமை நிச்சயம் மேம்படும்,” என்றார். கர்நாடக மாநில இளைஞர் அதிகாரமளித்தல், விளையாட்டு துறை கமிஷனர் சேத்தன் கூறுகையில், ''பெங்களூரு ஓபன் டென்னிஸ் 10வது பதிப்பை நடத்துவது மிகப்பெரிய சாதனை. இந்த போட்டி உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. இந்த ஆண்டின் உலகத்தரம் வாய்ந்த முதல் டென்னிஸ் போட்டியாக கருதப்படுகிறது. இந்திய இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிகாட்ட ஒரு தளம் உருவாக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி