மேலும் செய்திகள்
போக்குவரத்து விதி மீறல் 2,003 வழக்குகள் பதிவு
06-May-2026
பெங்களூரு: ஆர்.சி.பி., இரண்டாவது முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக, 260 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. குஜராத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல்., இறுதி போட்டியில் ஆர்.சி.பி., இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள், சாலைகளில் வாகனங்களில் வேகமாக சென்றது, வாகனங்களில் சாகசம், பட்டாசுகளை வெடித்து வெற்றி கோஷம் எழுப்பியது என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளையில், நகர போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக, 260 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
06-May-2026