உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராகுலிடம் ஆதரவு கோரிய பைக் டாக்சி ஓட்டுநர்கள்

ராகுலிடம் ஆதரவு கோரிய பைக் டாக்சி ஓட்டுநர்கள்

கர்நாடகாவில் 'பைக் டாக்சி'யை அமல்படுத்தக் கோரி, கர்நாடக பைக் டாக்சிகள் ஓட்டுநர் சங்கத்தினர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு ஜூன் 16ம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஓலா, ராபிடோ, ஊபர் நிறுனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இந்த மனுவின் மீதான விசாரணை நடக்கிறது. நீதிமன்ற அனுமதியின்றி மூன்று நாட்களுக்கு முன்பு, பைக் டாக்சிகள் சேவை மாநிலம் முழுவதும் மீண்டும் துவங்கியது. நேற்றும் பைக் டாக்சிகள் சேவை கிடைத்தன. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவை மீறி பைக் டாக்சிகள் இயக்கப்படுவது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இந்நிலையில், கர்நாடக பைக் டாக்சி ஓட்டுநர்கள் நல சங்கத்தினர், நேற்று புதுடில்லி சென்று, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்தனர். 'கர்நாடகாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர்கள் உள்ளனர். பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், அவர்களின் குடும்பம் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 'பள்ளி கட்டணம், வீடு வாடகை, வாகன மாத தவணை போன்றவை கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டும். முதல்வரிடம் பைக் டாக்சி அமல்படுத்த வலியுறுத்த வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர். இதை கேட்ட அவர், ''முதல்வர் சித்தராமையா, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் வலியுறுத்துவேன்,'' என தெரிவித்தார். அப்போது, காங்., மூத்த தலைவர் சோனியா, பிரியங்கா ஆகியோரும் உடனிருந்தனர். அவர்களும், பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை