முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ஜனாதிபதிக்கு சென்றது மசோதா
பெங்களூரு : கர்நாடக அரசு மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் இடையே நடந்து வந்த பனிப்போர், தற்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு வரை சென்றுள்ளது. ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, ஜனாதிபதியின் பார்வைக்கு கவர்னர் அனுப்பினார்.இதற்கு முன், அரசு பணிகள் ஒப்பந்தத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இருந்தது. இந்த சலுகையை கர்நாடக அரசு, முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் விஸ்தரிக்க முடிவு செய்துள்ளது. இந்த சமுதாயத்தினருக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் வகுத்தது.இதை சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையிலும் நிறைவேற்றியது. மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. இதில் கையெழுத்திடாத கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஜனாதிபதி திரவுபதி முர்வின் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், 'அரசியல் சாசனத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு இடம் இல்லை. இது குறித்து உச்சநீதிமன்றமும், பல தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.