உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பறவைக்காய்ச்சல் பீதி மக்களுக்கு பரிசோதனை

 பறவைக்காய்ச்சல் பீதி மக்களுக்கு பரிசோதனை

பெங்களூரு: சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: பெங்களூரு புறநகர், ஹெசரகட்டாவின் மத்கூர் கிராமத்தில் அரசு சார்ந்த கோழிப்பண்ணையில் இருந்த கோழிக்கு, 'ஹெச்5என்1' தொற்று உறுதியானது. அதன்பின் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அதிரடி நடவடிக்கை எடுத்து, தொற்று பரவாமல் தடுத்தன. கோழிகள் அழிக்கப்பட்டன. ஹெசரகட்டா கோழிப்பண்ணையின், ஒரு கி.மீ., சுற்றுப்பகுதி, நோய் பாதிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. தொற்று மனிதர்களுக்கும் பரவி இருக்கலாம் என்பதால், தொற்று தென்பட்ட பகுதியின் 10 கி.மீ., எல்லையில் உள்ள, 22 கிராமங்களின் மக்களுக்கு, ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 28,172 பேரின் தொண்டை திரவத்தை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இவர்களில் யாருக்கும் தொற்று இல்லை என, அறிக்கை வந்துள்ளது. பத்து நாட்களுக்கு பின், மீண்டும் தொண்டை திரவம் மாதிரி சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இன்னும் அறிக்கை வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 90 நாட்கள் வரை, இப்பகுதியில் கோழி வளர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சுகாதாரத்துறை வெளியிட்ட நெறிமுறைகளை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ