உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்ப்பத்தடை மாத்திரைகளாலும் பெண்களுக்கு மாரடைப்பு வரும்

கர்ப்பத்தடை மாத்திரைகளாலும் பெண்களுக்கு மாரடைப்பு வரும்

பெங்களூரு: பெண்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பதற்கு, கர்ப்பத்தடை மாத்திரைகளும் காரணம் என்பது, ஜெயதேவா இதய மருத்துவமனை வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.கர்நாடகாவின் ஹாசன் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழப்போர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.மற்றொரு பக்கம் இளம்பெண்களும் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய, ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர். அதில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக, ஜெயதேவா மருத்துவமனை வல்லுநர்கள் கூறியதாவது:இளம்பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட, கர்ப்பத்தடை மாத்திரைகளும் முக்கிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. மருந்துக் கடைகளில் கர்ப்பத்தடை மாத்திரைகள், எளிதில் கிடைக்கின்றன. குழந்தை பெற விரும்பாத பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்படுத்துகின்றனர்.இத்தகைய மாத்திரைகள், ரத்தத்தை உறைய வைக்கும். இது மாரடைப்புக்கு வழிவகுக்கும். பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகள் மட்டுமின்றி, வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதையும் முடிந்த வரை குறைத்துக் கொள்வது நல்லது.இந்த மாத்திரைகளால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இத்தகைய மாத்திரைகள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சரியான சட்டம் வகுப்பது அவசியம். இதுகுறித்து, அரசுக்கு விரிவான அறிக்கை அளிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை