உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் சபாநாயகர் இன்று முக்கிய ஆலோசனை

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் சபாநாயகர் இன்று முக்கிய ஆலோசனை

பெங்களூரு:சட்டசபையில் இருந்து 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்வது குறித்து, சபாநாயகர் காதர் தலைமையில் இன்று ஆலோசனை நடக்கிறது.நடப்பாண்டு மார்ச் மாதம், சட்டசபை கூட்டம் நடந்தபோது, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, தன்னை ஹனிடிராப் மோசடி வலையில் சிக்கவைக்க, சதி நடந்ததாக குற்றஞ்சாட்டினார்.இந்த சதியில் சொந்த கட்சியினர் கைவரிசை இருக்கலாம் என, மறைமுகமாக சந்தேகம் தெரிவித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.'ஹனிடிராப்' குற்றச்சாட்டு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என, எதிர்க்கட்சியான பா.ஜ.,வினர், சட்டசபையில் சபாநாயகரின் இருக்கைக்கு முன் சென்று, தர்ணா நடத்தினர். காகிதங்களை கிழித்து வீசினர்.சபாநாயகரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாகக் கூறி, 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதங்களுக்கு, சட்டசபையில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.இதனால் சபாநாயகர் மீது பா.ஜ.,வினர் அதிருப்தி அடைந்தனர். மாநில அரசின் நெருக்கடிக்கு பணிந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்ததாக குற்றஞ்சாட்டினர். சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும்படி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். பா.ஜ., குழுவினர், இதுகுறித்து கவர்னரிடமும் புகார் அளித்திருந்தனர்.சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, நீதிமன்றத்தை நாட ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.இந்த நிலையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து, சபாநாயகர் காதர் தலைமையில் இன்று ஆலோசனை நடக்கிறது.முதல்வர் சித்தராமையா, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பங்கேற்கின்றனர்.பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சாதகமாக முடிவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை