மேலும் செய்திகள்
அவமதிப்பு நாட்டுக்கு; ஆணவச்சிரிப்பு ராகுலுக்கு!
16-Nov-2026
பெங்களூரு: ‘‘கலபுரகி பா.ஜ., தலைவர்களால் தான் ஜனநாயக சீர்குலைவு ஏற்பட்டு உள்ளது,’’ என, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் இந்த வாரத்தில், கர்நாடகாவின் கலபுரகிக்கு வரவுள்ளார்; ஜனநாயகம் குறித்து சொற்பொழிவு ஆற்ற உள்ளார். ஆனால், கலபுரகியில் உள்ள பா.ஜ., தலைவர்கள் தான், ஜனநாயகத்தை சீர்குலைக்கின்றனர் என்று ராஜ்நாத்சிங்கிடம் யாராவது சொல்ல வேண்டும். கலபுரகியின் ஆலந்த் சட்டசபை தொகுதியில், 5,994 வாக்காளர்கள் பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முதலில் பா.ஜ., தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கில் அனைத்தையும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் சிறப்பாக விசாரித்து, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுபாஷ் குட்டேதார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது வெறும் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு மட்டுமல்ல. வாக்காளர்கள் ஜனநாயக உரிமையை பறிக்கும் ஒருங்கிணைந்த முயற்சி. ஜனநாயகம் பற்றி எங்களுக்கு பாடம் புகட்டுவதற்கு முன், கர்நாடகாவில் நடந்த ஜனநாயக உரிமை அத்துமீறல் குறித்து, பா.ஜ., விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
16-Nov-2026