பா.ஜ., - எம்.எல்.ஏ., நண்பருக்கு கத்திக்குத்து
ஜெயநகர்: பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி. இவரது நண்பர் சோமசேகர் ரெட்டி, 50. ஜெயநகர் 9வது பிளாக்கில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் நடத்துகிறார். இங்கு தண்ணீர் பிடிக்க ஐந்து பேர் வந்தனர். சோமசேகர் ரெட்டியிடம் வேண்டுமென்றே தகராறு செய்து அவரை தாக்கியதுடன், கத்தியால் வயிறு, முதுகில் குத்திவிட்டு தப்பினர். பலத்த காயம் அடைந்தவரை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்ததாக, ஐந்து பேர் மீதும் ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் சோமசேகர் ரெட்டி புகார் செய்தார். இதன் அடிப்படையில் ஜெயநகரின் ரவி, பாலு, புவி, விஷ்ணு, சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடக்கிறது.