உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உள் இடஒதுக்கீடு அமல்படுத்தும் தேதி அறிவிக்க பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தல்

உள் இடஒதுக்கீடு அமல்படுத்தும் தேதி அறிவிக்க பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தல்

பெங்களூரு: பெங்களூரில் நேற்று பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோல் அளித்த பேட்டி:எஸ்.சி., பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாநிலம் முழுதும் கணக்கெடுப்பு நடப்பதாக அரசு அறிவித்துள்ளது.தொழில்நுட்பம் மூலம் கணக்கெடுப்புகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், இதன் அறிக்கை, விரைவிலேயே கிடைத்துவிடும். எனவே, இந்த இடஒதுக்கீட்டை என்று அமல்படுத்த போகிறீர்கள் என்பதை முதல்வர் சித்தராமையா அறிவிக்க வேண்டும்.காந்தராஜு கமிட்டியை அமைச்சரவையில் தாக்கல் செய்தபோது, சக்தி வாய்ந்த சமுதாய தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அமைச்சர்கள் மஹாதேவப்பா, பரமேஸ்வர், பிரியங்க் கார்கே, முனியப்பா, திம்மாபுரா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.காந்தராஜு அறிக்கை, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மட்டுமல்ல, சமூகம், கல்வியையும் ஆய்வு செய்துள்ளது. நாட்டில் 30 ஆண்டுகளாக உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக எழுந்த பல்வேறு பிரச்னைகளுக்கு, 2024 ஆக., 1ம் தேதி, 'ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள் இடஒதுக்கீடு கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது' என்று கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம்.இந்த தீர்ப்பை ஏற்று, ஹரியானா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளன. ஆனால் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பல 'தலையீடு'களால், மிகவும் மெதுவாக இப்பணியை செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை