உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வீணை வாசித்து அசத்திய பா.ஜ., - எம்.பி., யதுவீர்

 வீணை வாசித்து அசத்திய பா.ஜ., - எம்.பி., யதுவீர்

ஷிவமொக்கா: ஷிவமொக்காவில் நடந்த சரஸ்வதி சங்கீத வித்யாலயா வெள்ளி விழாவில், மைசூரு எம்.பி., யதுவீர், வீணை வாசித்து பார்வையாளர்களை அசத்தினார். ஷிவமொக்காவில் நடந்த சரஸ்வதி சங்கீத வித்யாலயாவின் வெள்ளி விழாவில் மைசூரு எம்.பி.,யும், மைசூரு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருமான யதுவீர் பங்கேற்றார். வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக, கலாசார நிகழ்ச்சியாக 'வீணை திரிசதோத்சவா' நடந்தது. வீணை வாசிப்பதில் முறையாக பயிற்சி பெற்ற யதுவீர், வீணை வாசித்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். பின், அவர் பேசியதாவது: மேற்கத்திய இசையை வரவேற்பதுடன், கர்நாடகத்தின் பாரம்பரிய இசையையும் பாதுகாத்து வளர்க்க வேண்டும். அப்போது தான், நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். மைசூரு உட்பட பல்வேறு அரசு குடும்பங்கள், தங்களை கலை பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. கர்நாடக இசை மற்றும் கலையை பாதுகாக்க ஊக்கமளிக்கும் சரஸ்வதி சங்கீத வித்யாலயாவின் பணியை மறக்க முடியாது. இதுபோன்று அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை மாநிலம் முழுதும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை