மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி தெருமுனை பிரசார கூட்டம்
05-Jul-2025
மைசூரு : மைசூரில் பல கோடி ரூ பாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் உற்பத்தி மையம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ராஜினாமா செய்ய கோரி, பா.ஜ., இளைஞரணியினர் போராட்டம் நடத்தினர். நகர பா.ஜ., இளைஞரணி தலைவர் ராகேஷ் கவுடா கூறியதாவது: கலாசார நகரமான மைசூரின் பெலவட்டா அருகில் உள்ள வெளிவட்ட சாலையில், கேரேஜ் ஒன்றில், மஹாராஷ்டிரா போதை தடுப்புப் படை போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். கேரேஜ் பின்பகுதியில், 390 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் செய் வதற்கான பொருட்கள் கண்டுபிடித்தனர். இது மைசூரு போலீசாருக்கும், உள்துறை அமைச்சருக்கும் அவமானம். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். போதைப் பொருட்களை உட்கொள்ளும் இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். போதை விநியோகிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
05-Jul-2025